'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி - முகப்பு


பொது மக்களாகிய நாம், 30 வகை கொள்கைகள் கொண்ட 'மக்களின் சேவகர்கள்' என்ற‌ கட்சியை, தொடங்குவோம்.

'மக்களின் சேவக‌ர்கள்'- கொள்கைகள் மட்டுமே சார்ந்து, சாமனிய மக்களால் உருவாக்கப்படும் கட்சி

நாம், எதை தேர்வு செய்யப்போகிறோம்? என்ற கால கட்டத்தில் உள்ளோம்...


கட்சியின் சில‌ கொள்கைகள் இங்கே! விரிவாக 30வகை கொள்கைகளை பார்க்க 'கொள்கைள்' பக்கத்திற்கு செல்லுங்கள்

நீர் ஆதாரத்தை உருவாக்குவோம், சேமிப்போம், சிக்கனமாக பயன்படுத்துவோம்.

விவாசயிகளே!, உணவு பொருட்களின் விலையை நிர்நியம் செய்வார்கள்6

கல்வியை முறையாக்கி, மேம்படுத்துவோம்.!

உணவு கலப்படத்தை நிறுத்துவோம்.!

சுகாதரம் மற்றும் சுற்றுச் சுழல் சார்ந்த கொள்கைகள்:‍

பரவலாக்கத்தை நடைமுறைப் படுத்தும் கொள்கைகள்!

  • குடும்பம், தனிநபர், பணம், தனியார் நிறுவனம் (கார்ப்பிரேட் - Corporate Company ), மதம் மற்றும் சாதி சார்பு இல்லாத.. கொள்கைகள் சார்ந்த மக்களுக்கான‌ கட்சியை உருவாக்குவோம்.!
  • மாதம் ஒரு முறை மக்களை சந்திக்கும் - சுருசுருப்பாக‌ செயல்படும் அரசாங்கம் அமைப்போம்.!!
  • இயற்கை வழி, அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வை செயல்படுத்துவோம்.! [கொள்கைகள்]
  • கல்வி, மருத்துவம் போன்ற பல அடிப்படை துறைகளை முதலில் முறைப்படுத்துவோம், பிறகு சீர்திருத்தம் செய்வோம். இவைகள் வியாபாரமாக்கப் பட்டுள்ளது, இவற்றால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப் பட்டுள்ளோம்.! [நம் அரசாங்கத் திட்டங்கள்]

  • போராட்டகாரர்களே!, சமுக சேவகர்களே!, மற்றும் சுயநிதி குழுக்களே! அரசியல் கள‌த்திற்கு வாருங்கள்.., உங்களை போன்றோர் அரசியல் நிர்வாக மூலம்தான், நம் மக்களுக்கும், இயற்கைக்கும் மிக பெரிய முன்னேற்றத்தை கொண்டுவரமுடியும்.. ‍
  • தமிழனே! இனி உன்மையான‌ மக்களாட்சி செய்வோம்.!

  • பணம் வைத்தும், பணத்தை குவித்தும் கட்சி அரசியல் செய்வோர்களை தவிர்த்து, நாம் நல்ல குணம் வைத்து மக்களுக்கான அரசாங்கம் அமைய.. மக்கள் மணம் வைத்தால் நிச்சியமாக சாத்தியமே!
  • பொறுத்தது போதும்!. படித்த இளைஞர்களாகிய நாம் இனி மக்களுக்கான‌ ஆட்சி அமைக்க இருக்கும் இந்த புதிய முயற்சியை ஆதிரிக்க‌ உறுப்பினராகுங்கள்
  • ஒரு முறை முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தால், அதன் பிறகு எந்த‌ அமைச்சர் பொறுப்பையும் ஏற்கமுடியாது. மக்கள் பிரதிநிதியாக இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.. கட்சி விதிமுறைகள்!
  • ஆட்சியில் இல்லாத போதும் நம்மால் முடிந்த சமுக‌ பணிகளை செய்வோம் [கட்சி மூலம் செயல்படுத்தபடும் திட்டங்கள்!]

கட்சி தொடங்கும் நாளும், இடமும் பெரும்பாலான‌ உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு பிறகு அறிவிக்கப்படும். முக்கிய அறிவிப்புகள்!

தனி நபர் சார்ந்த அரசியல் வேண்டாம் என்ற கொள்கையின் அடிப்படையில் பெயர்களை குறிப்பிடவில்லை, ஏன் எனில் நாமும் வெறும் கருவிதான். எப்படிருந்தாலும் முதல் கூட்டத்தில் நாம் அனைவரும் சந்திப்போம்.!

'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி - *கொள்கைகள்*

'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி

கொள்கை சார்ந்த மக்கள் ஆட்சி அமைய ஆதிரிக்க.. விரும்பும் (அ) இந்த கட்சியின் உறுப்பினர்க்கான‌ விண்ணப்பம் (உங்களுக்கு மனமார்ந்த‌ நன்றிகள்!)

'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி - நம் அரசாங்க திட்டங்கள்

திட்ட எண்திட்டத்தின் பெயர்திட்டத்தின் சிறு விளக்கம்
1 "மக்களின் பிரதிநிதி, மக்களை ஒவ்வொரு மாத இறுதியில் சந்தித்து, அரசாங்க செயல்பாட்டின் நிலையை மக்களுக்கு தெரிவித்தும், மக்களின் குறைகளை கேட்டறிந்தும் அதன் மூலம், மக்களுக்கு தேவையான மாற்றத்தை கொண்டுவருவோம்."
2 "ஒவ்வொரு பருவ காலம் முடிய‌ ஒரு மாததிற்கு முன், அனைத்து மாவட்டத்திலும் தனிதனியே, விவசாய பொருளின் விலை நிர்நியம் கூட்டம் நடத்தபடும். இதில் மாவட்ட விவசாய சங்கம் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் பங்குபெறுவார்கள். அந்த மாவட்டத்தில் விளைகின்ற விவசாய பொருட்களுக்கு அடிப்படை விலையை நிர்நியம் செய்வார்கள்."
3 "குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் விநியோகிக்க படும். குறைந்த பட்ச‌ சராசரியான‌ குடிநீர் அனைத்து வீட்டிற்கும் இலவசமாக வழங்கபடும். அதிகமாக பயன்படுத்தவர்களுக்கு, நீர் அளவு மானி மூலம் பயன்பாட்டைப் பொருத்து நீர் கட்டணம் வசலிக்கப்படும்."
4 "கிணறு, ஏரி, குளம், குட்டைகள் ஆண்டுற்கு ஒரு முறை தூர்வாரி சுத்தம் செய்யபடும்."
5 புதிதாக கட்டும் வீடுகளிலில் தன் வீட்டின் கூறையிலிருந்து வடிந்து நீர்தெட்டியில் சேகரிக்க படும்
6 "வீடு, சாலை, மற்றும் வீதியில் வடியும் மழை நீரை வடிகட்டிய வடிகால் மூலம் நீர்தேக்கதிற்கோ அல்லது ஆறு, குளம் (அ) ஏரிக்கு கொண்டு சென்று சுத்திகரிக்க பட்டு கலக்கபடும்."
7 "அயல்நாட்டில் (உதாரணம்:பிரிட்டன்) உள்ளது போல வீட்டின் கழிநீரை ஆரம்ப இடத்திலே வடிகட்டி, வீட்டின் இனைப்பில் வடிகட்டி பின்பு குழாய் மூலம் கொண்டு சென்று, கழிவுகளை சிகிச்சை அளிக்கப்பட்டு, கழிவுகளை முறையாக அப்பறபபடுத்தப் படும் (அல்லது) சுத்திகரித்து விவசாயம் போன்ற மற்ற பயன்பாட்டிற்கு திருப்ப படும்"
8 "மக்கள் தன் வீட்டின் குப்பைகளை நகராட்சி அளிக்கும் கூடைகளில் உணவு கழிவுகள், மக்கும் காகிதம், மக்காத நெகிழி (பிளாஸ்டிக்), கண்ணாடி குப்பைகள் என‌ தனி தனியே பிரித்து வைக்க வேண்டும். இவற்றை நகராட்சி தன் மூடிய குப்பை வண்டி மூலம் எடுத்து சென்று மறுசுழற்சி செய்யபடும். இதற்கு மறுசுழற்சி மையங்கள் அமைக்க படும்."
9 "ஆண்டிற்கு ஒரு முறை தன் வாகனங்கள் சாலையில் ஓட்டதற்கு ஏற்றதா என்று ஒவ்வொருவரும் வண்டியை சோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் வாங்க வேண்டும். இந்த சோதனை முடிவுகள் போக்கிவரத்து தரவுத் தளத்தில் (database) சேமித்து கண்காணிக்க படும். ஒளி எழுத்துணரி (Optical Character Recognition) என்ற நுட்பத்தை வைத்து தாணியங்கி கணினி மூலம், வாகணங்களின் பதிவு எண்ணை கண்டறிந்து, சான்றிதழ் இல்லாத வாகனங்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கபடும்."
10 ஈகநார் மற்றும் ஈகநார் பை தயாரிக்கும் நிறுவணங்களை வேறு ஒரு தொழிலை செய்ய அவர்களுக்கு அறிவுறுத்துவோம். சில ஆண்டுகளுக்கு அந்த நிறுவனங்களுக்கு பெருநிறுவன வரி குறைப்போம்.

'மக்களின் சேவக‌ர்கள்' - கட்சி மூலம் செயல்படுத்தபடும் திட்டங்கள்

திட்ட எண்சேவை திட்டத்தின் பெயர்பிரச்சனை என்ன?திட்டத்தின் விளக்கம்திட்டம் தொடக்க தேதிதிட்டம் முடிவு தேதிநகரம் (அ) ஊரின் பெயர்தாலுக்கவின் பெயர்மாவட்டம்
1 கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு சென்று சுத்திகரிக்க படும் திட்டம் "கொசு தொல்லையிருந்து நிரந்திரமான விடுதலை. டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற பல நோய்களிருந்து மக்களுக்கு விடுதலை."மேலும் விள்ளக்கத்திற்கு இதனை சுடுக்குங்கள்09/09/201709/12/2017பழநீமக்களின் சேவகர்கள்திண்டுக்கல் மாவட்டம்
2 "மழை நீரை சேமிக்கும் திட்டம் - ஏரி குளங்கள் வெட்டுவது, தூர்வாருவது" விவசாயத்திற்கு நீர் மற்றும் குடிநீர்க்கான‌ ஆதாரம் குறைந்து கொண்டே இருக்கிறது"ஏரி குளங்கள் வெட்டுவது, தூர்வாருவது"09/09/201709/11/2017பிள்ளையார்பட்டிதஞ்சாவூர் தாலுக்காதஞ்சாவூர் தாலுக்கா

'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி - விதிமுறைகள்!

'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி - தொடர்புக்கு..'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி - அறிவிப்புகள்!நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் பற்றிய "மக்களின் சேவகர்கள்" என்று பொது மக்களால் தொடங்க இருக்கும் புதிய கட்சியின் அறிக்கை

பிரச்சனை என்ன‌?:-

நெல் களஞ்சியமாக விளங்கும் காவேரி கரையேர பகுதிகளில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

பக்க விளைவுகள் :-

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அந்த மண் கடுமையாக கெட்டு போகும், அந்த மண்ணில் பயிர் செய்ய முடியாது. நீர் தரம் கெட்டு போகும், நீர் ஆதாரம் குறைந்து விடும். நீர் மட்டம் கீழே போகும். இதைப்பற்றி பல வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சி அறிக்கைகள் ஊடகங்களில் உள்ளது. இதனை பற்றி ஒ.என்.ஜி.சி நிறுவனத்திடம் கேட்க கூடாது. அவர்கள் நேர்க்கு மாறாக சொல்லுவார்கள். உதாரணம்:‍ ஒரு ஒயுன் (Wine) தாயாராக்கும் நிறுவனம், ஒயுன் (Wine) குடித்தால் இதயத்திற்கு நல்லது என்று தான் சொல்லுவார்கள். ஆனால் அதன் பாதிப்பை பற்றி சொல்ல மாட்டர்கள்.

அறிவியல் விளக்கமும், கேள்வியும், தீர்வும் :-

உலகளாவிய எண்ணெய் இருப்புக்களை உறுதிப்படுத்திய (British Petroleum) பிரிட்டிஷ் பெட்ரொலியத்தின் வருடாந்தர‌ அறிக்கையானது 2013 ஆம் ஆண்டின் முடிவில், பூமி கிட்டத்தட்ட 1.688 ட்ரில்லியன் பில்லியன் கச்சா எண்ணை கொண்டுள்ளது, இது தற்போதைய விகிதத்தில் 53 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் . இது அறிவித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆக இன்னும் 50 ஆண்டுகள் கூட எண்ணெய இருப்பு இருக்காது.
எண்ணெய், குறிப்பாக வாகணங்களுக்கு தேவை என்றால். தற்போது பெறும்பாலான கார் நிறுவணங்கள், 100% மின்சக்தியில் ஓட கூடிய கார்கள் இன்று விர்பனையில் உள்ளது.
அடுத்த அனைவரையுடைய கேள்வியும் வீட்டிற்கே மின்சாரம் பற்றாகுறை என்பது?.
அதற்கு அனைவரையும் வியக்கவைக்க பதில் இருக்கு. அதாவது ஒரு சின்ன வீட்டின் கூறையில் 4*4மீட்டர் அளவு உள்ள சூரிய தகடு மூலம் ஒரு வருடத்திற்கு 4.5மெகா வாட் (4.5MW) மின் உற்பத்தி செய்யும். நம்முடைய 2001 வீட்டி எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 16,996,604 வீடுகள் தமிழகத்தில் உள்ளது. ஆக இந்த வீடுகளில் வெறும் 4*4மீட்டர் சூரிய தகடுகள் இருந்தால் 7,64,84,718 மெகா வாட் சூரிய ஓளி மூலம்.. மின்சாரம் உற்பத்தியாகும்.
2012 ஆண்டின் படி, நம் தமிழ்நாட்டிற்கு மின் தேவை வெறும் 12,000 மெகா வாட் (12,000MW) தான். ஆகா 7 கோடி மெகா வாட்கான (7 Crores MW) ஆதாரம் இருக்கின்றன இயற்கையான‌ திட்டத்தை விட்ட விட்டு.. விவசாயத்தின் வாழ்வாதாரமாக இருக்கு கூடிய பூமியை கெடுத்து, நீர் ஆதாரத்தை கெடுத்து, வெறும் 50 ஆண்டுகள் கூட எண்ணெய் இருப்பு இல்லாத திட்டத்தை நிரைவேற்றுவோம் இதான் வளர்ச்சி செல்லுவது. ஆற்றல் சார்ந்த கொள்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெளிவான சிந்தனை இல்லை என்பதை காட்டுகிறது (அ) தன் சுயநலத்திற்காக‌ அதைப் பற்றிய‌ அக்கறையை விட தனியார் நிறுவனங்கள் சம்பாதிக்க வேண்டும் என்கிற அக்கறை தான் உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

சட்ட விரோதமாக செயல் படும் மத்திய மற்றும் மாநில அரசு:-

மேலும் இந்திய அரசியல் அமைப்பு அடிப்படை சட்டத்தின் (Article 21- Right to Life and Liberty) படி ஒரு மனிதன் தான் நினைத்த‌ வாழ்க்கை வாழ‌ உரிமை உள்ளது. இதனை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
கதிராமங்கலத்திலோ அல்லது நெடுவாசலிலோ தங்கமே இருந்தாலும், அந்த மக்கள் விரும்பினால் (அ) ஒப்புதல் அளித்தால் தான் எந்த திட்டத்தின் செய்ய முடியும், அதனை விட்டு ஒரு அதிகாரம் அடக்குமுறை போல அவர்கள் வாழ்வாதாரம் அழிந்தால் என்ன?. விவசாயம் நிலம் கெட்ட என்ன்?.. குடிநீர் பாதித்தால் என்ன?.. என்று எந்த கவலையும் இல்லாமல் மக்களை ஒடுக்குவது "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் = அடிப்படை உரிமை " மீறிய செயல். இது மிக கடுமையாக கண்டிக்கதக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் மக்களுக்கு தான் சாதகமாக அமையும், ஆனால் தாமதமாக விடும் என்ற கவலை உள்ளது. மேலும், நீதி மன்றத்தில் வழக்கு இருந்தால், நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிடமுடியாது என்று தட்டி கழித்து விடுவார்கள். இந்த போராட்த்தை வேறு மாறி கையாள வேண்டும்.

போராட்டம் யாரை நோக்கி இருக்க வேண்டும்:-

நம் போராட்டம் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை நோக்கி இருக்க கூடாது. ஏன் எனில் அது ஒரு அரசு சார்ந்த நிறுவனம் மட்டுமே, அவர்களுக்கு சமுக பொறுப்பு இருக்கா என்றால் சந்தேகம் தான். நம் போராட்டம் : இந்த திட்டத்தை கொண்டு வந்த‌ மத்திய அரசை எதிர்த்தும், இந்த திட்டத்திற்கு மக்களை ஆலோச்சிக்காமல் ஒப்புதலை அளித்த மாநில அரசை எதிர்த்தும் தான் நாம் போராட வேண்டும்.நிரந்திர தீர்வு: காவேரி படுகையை பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து ஒரு சட்டத்தை நம் மாநிலம் இயற்ற வேண்டும். இப்படி செய்தால், இந்த மாறி மக்கள் விரோத வாழ்வாதார அழிக்க கூடிய யாராலும் கொண்டுவரமுடியாது. இதன் பிறகு தானாகவே, ஒ.என்.ஜி.சி நிறுவனம் மூட்டை கட்டி கிளம்பி விடுவார்கள்.

'மக்களின் சேவக‌ர்கள்' கட்சி